பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் !

பிக்பாஸ் நான்காம் சீசனில் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் தற்போது வழங்க தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய நாளில் நான் கோபத்தில் பேசிவிட்டேன் என பாலாஜி ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் வழக்கம்போல மீண்டும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.

இன்றைய நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், பாடல் பாடும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டியது சுவாரஸ்யமாக இருந்தது. பர்சர் அழுத்தியவுடன் முதலில் பாடல் பாடுபவர்களே இதில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். பாலாஜி, ஷிவானி மற்றும் கேபி கடைசி வரை விளையாட…ரியோ ஜட்ஜாக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், பாலாவுக்கும் ஆரிக்கும் இடையே புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. நீ ஆம்பள பையன் தானா…ஓடி விளையாடு என்று பாலாஜியை ஆரி கேட்க, கோபத்துடன் கிளம்பினார் பாலாஜி. இப்படி விளையாடுவதற்கு விளையாடாமலே இருக்கலாம் என்று மறுபுறம் ஆரி அமர்ந்து கொள்கிறார். இந்த இருவரின் சண்டை எப்போது தீரும் என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.