இந்த வாரம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்…..?

பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானி அம்மா வந்து சென்றதில் ஆரம்பித்து, ஞாயிற்றுக் கிழமை எபிசோடு வரைக்கும் பாலாவுக்கு தான் அதிக பஞ்சாயத்துகள் வந்து சேர்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கன்ஃபெஷன் ரூமில் கண்கலங்கிய படி காணப்பட்டார் பாலாஜி. கோவத்த மட்டுமே பார்த்து வளந்திருக்கேன் என்றும், நல்லது கெட்டது கூற யாரும் இல்லை என்று கூறினார். மக்களும் சரி, மக்களின் பிரதிநிதியான கமல் சாரும் கண்டித்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமில் வைத்து வெளியேற்றியதை போலவே பாலாஜி முருகதாஸையும் அதிரடியாக வெளியேற்றுகிறாரா கமல் என்ற பரபரப்பை இன்றைய முதல் புரமோ கிளப்பி இருந்தது. கன்ஃபெஷன் ரூமில் பாலாஜி முருகதாஸ் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரி Strategy தாண்டி வேற எங்கேயோ சென்றபோது அதை தடுத்து நிறுத்துகிறார் கமல். ஆரியை கமல் கேள்வி கேட்டதும், ரம்யா முகத்தில் அப்படி ஒரு புன்னகை. அதன் பின் பேசிய ரம்யா, ரியோவின் ஆட்டம் குறித்து கமலிடம் கூறுகிறார்.