சென்னை:

ழக்கு காரணமாக தகுதி நிக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி,  ஒசூர் தொகுதியில்  அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யகூடாது என அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து  பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிட்ட சூலூர்  சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டடது.

இந்த நிலையில்,  காலியாக இருந்த  4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்து உள்ளது. அதன்படி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சிகள் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், ஓசூர் தொகுதியில் பாலகிருஷ்ணரெட்டி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று டிடிவி கட்சி சார்பில் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.