தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது.
imply South என்ற OTT தளத்தில் அந்த படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பாலாவின் வர்மா திரைப்படம் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண OTT தளத்தில் 140 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வர்மா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரிலீசான உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.