பாலா நீக்கம்: மீண்டும் எடுக்கப்படுகிறது விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’

டிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகம் ஆகும்  ‘வர்மா’  படம் காதலன் தினத்தன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் வெளியாவதில் தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் படம் மீண்டும் எடுக்கப்பட உள்ளது ; புதிய குழு படத்தை எடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்தில் இரந்து  பாலா நீக்கப்பட்டுள்ளார். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. படம் ஜூனுக்கு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த  படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வருகிறார். காதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி  வந்தார்.  படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘வர்மா’ திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தை புதிய படக்குழுவினர் மீண்டும் படத்தை எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே பெயரில் ஏற்கனவே இருந்த நடிகர், நடிகை, இயக்குனருக்கு பதிலாக புதிய டீமின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் வர்மா படத்தில் ஹீரோவாக துருவ் தொடர்கிறார்.