பாலாவின் ‘வர்மா’ வெளியீட்டுக்குத் தயாராகிறது…!

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வசம் உள்ளது. ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். அதன் இறுதி வடிவம் திருப்தி தராததால் கைவிட்டுவிட்டார்கள். .

அதனைத் தொடர்ந்து கிரிசாயா இயக்கத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் தயாரானது. சில நாட்களுக்கு முன்பு ‘வர்மா’ சிங்கப்பூரில் தணிக்கை செய்யப்பட்டது.

தற்போது ‘வர்மா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் தொலைக்காட்சியில் ப்ரிமீயர் முறையில் திரையிடலாமா, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடலாமா அல்லது திரையரங்கில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு படம் முழுமையாகத் தயாராகி கைவிடப்பட்ட முதல் படம் ‘வர்மா’ தான் என்பது குறிப்பிடத்தக்கது .