கர்தா

ந்தோனேசிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவில் கரங்கேசம் பகுதியில் உள்ள சுலிக் கிராமாத்தில் மவுண்ட் அகுங் என்னும் எரிமலை ஒன்று உள்ளது.  அதில் இருந்து புகையும் நெருப்பும் பெருமளவில் வெளி வருவதால் அந்தப் பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.

இதையொட்டி அந்தத் தீவில் உள்ள ஙுரா ராய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.  இதனால் 196 சர்வதேச விமானங்கள் உட்பட 445 விமான சேவை தடைபட்டுள்ளது.  பக்கத்தில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு சேவையை மாற்றி அமைக்க திட்டமிட்டு ஐந்து விமான நிலையங்களுக்கு விமானங்கள் திருப்பி அனுப்பபட உள்ளது.

பாலித் தீவு விமான நிலயத்தின் இணைய தளத்தில் அங்கிருந்து கிளம்பும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஸ்ரீவிஜயா, கருடா இந்தோநேசியா, டைகர் ஏர், மலேசியன் ஏர்லைன்ஸ் அண்ட் ஜெட்ஸ்டார் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.