6-வது முறையாக மீண்டும் இணையும் பால்கி – பி.சி.ஸ்ரீராம்,,,,!

இந்தி திரையுலகில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பால்கி.

இவர் பி.சி.ஸ்ரீராமின் நெருங்கிய நண்பர். ஆகையால் இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் பி.சி.ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர்.

இந்த கொரோனா ஊரடங்கில் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பால்கி.

இதிலும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். வீடியோ கால் மூலமாக பால்கி – பி.சி.ஸ்ரீராம் இருவரும் கதை தொடர்பாக பேசியுள்ளனர். வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து பி.சி.ஸ்ரீராம் “ஃபேஸ் டைம் மூலமாக எங்களுடைய அடுத்த படம் குறித்து விவாதித்த போது” என்று குறிப்பிட்டுள்ளார்.