டில்லி

காடுகள் அல்லாத இடங்களில் வளரும் மூங்கில் இனி மரங்கள் என கருதப்பட மாட்டாது என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது

மூங்கிலால் பல கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமின்றி மூங்கில்கள் நேரடியாகவே உபயோகப்படுத்தப் படுகின்றன  மரங்கள் என்னும் பாகுபாட்டில் வருவதால் மூங்கில்கள் மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அது தவிர காடுகள் அற்ற பகுதிகளில் மூங்கில் வளர்க்க விசேஷ அனுமதி பெற வேண்டும் என சட்டம் உள்ளது.

தற்போது ஒரு புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  அதன்படி காடுகள் அல்லாத இடத்தில் வளரும் மூங்கில்கள் மரங்கள் என்னும் பாகுபாட்டுக்குள் வராது.  இதன் மூலம் மூங்கில் வளர்ப்பு மேலும் எளிதாகும் எனவும் மூங்கில் வர்த்தகம் மேலும் வளரும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.