டெல்லியில் சீன பட்டாசுக்கு தடை! அரசு அதிரடி உத்தரவு!!

 

டில்லி:

டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு  உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.  தமிழகத்தின் சிவகாசியில் இருந்துதான் நாடு முழுவதும் பட்டாசுகள் சப்ளை செய்யப்பட்டு வருவது வழக்கம்.

china

கடந்த சில ஆண்டுகளாக வியாபாரிகளின் அதிக லாபம் ஈட்டும் ஆசையால்,  விலை குறைந்த சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.

வர இருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் ஒன்றாக, தீபாவளிக்கு சீன பட்டாசுகளை விற்க தடை விதித்ததுடன், மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சுற்றுசூழல் அமைச்சராக உள்ள இம்ரான் ஹூசைன் ஹஜ் பயணம் சென்றுள்ள நிலையில், இடைக்கால பொறுப்பை கவனிக்கும் அமைச்சர் கபில் மிஸ்ரா  இந்த  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘டெல்லி முழுவதும் பட்டாசு விற்பனையகங்களில் அதிரடி சோதனை நடத்தி சீன பட்டாசுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். சுற்றுசூழல் மற்றும் பொது மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் சீன பட்டாசுகளை டெல்லியில் அனுமதிக்க கூடாது.  கடந்த சில ஆண்டுகளாக சீன பட்டாசுகள் பல்வேறு இடங்களிலும் மிகவும் தாராளமாக கிடைத்ததாக புகார்கள் வந்தன.

ஆனால், இந்த ஆண்டு அது போன்ற ஒரு நிலை ஏற்படக் கூடாது. சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக கொண்டு வருதல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்றவற்றை தடுக்க தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு அதிரடி சோதனையில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சீன பட்டாசுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என கலால் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.