மலேசியாவில் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியிட தடை

கோலாலம்பூர்:

‘பத்மாவத்’ திரைப்படம் வெளியிட இந்தியாவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் வெளியானது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது. தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில் மலேசியாவில் பத்மாவன் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.