சென்னை: அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுவதாக   தமிழகஅரசு உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு ரத்து  செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.  ‘டிசம்பர் 2ந்தேதிமுதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் & தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, மேலும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுஉள்ளது.

அதன்படி, அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  ஏற்கனவே வழங்கப்பட்ட 100 நபர்களுக்கு மிகாமல் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுவதாகம் அதிரடியாக அறிவித்துஉள்ளது.

அதுமட்டுமின்றி  சமுதாய, பொழுதுபோக்கு, கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ”கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் கொரொனா நோய்த் தொற்றானது இரண்டாம் அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது.  இச்சூழ்நிலையில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்,  சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,  கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது இரத்து செய்யப்படுகிறது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில்  தொடர உத்தரவிடப்படுகிறது.

பொது மக்களின் நலன் கருதி, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள்  தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.