லண்டன்: பந்தைப் பளபளப்பாக்குவதில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், பந்துவீச்சாளர்களின் திறன்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
கொரோனா அச்சம் காரணமாக, பந்துவீச்சாளர்கள், பந்துகளை பளபளப்பாக்குவதற்காக எச்சிலைப் பயன்படுத்துவார்கள். அதன்மூலம் பந்தை  ஸீம் செய்து பேட்ஸ்மென்களை திணறடித்து, ரன்களைக் கட்டுப்படுத்த முடியும். காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் இந்த வழக்கத்திற்கு ஆப்பு வைத்தது கொரோனா வைரஸ்.
எச்சிலுக்குப் பதிலாக வியர்வை அல்லது வேறு அம்சங்களைப் பயன்படுத்தி பந்துகளை பளபளப்பாக்கும் விதிகள் கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோ ரூட் கூறியிருப்பதாவது, “இந்தப் புதிய விதி பந்துவீச்சாளர்களின் திறன்களை அதிகரிக்கவே செய்யும். ஒரு துணை அம்சம் இல்லாத நிலையில், ஒவ்வொருவரும் தமது சொந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவே விரும்புவர்.
பந்தை, கிரீஸில் வேறுவேறு விதங்களில் பிட்ச் செய்ய முயற்சிப்பர். அதன்மூலம் புதிய வழிகளைக் கண்டடைவர். இதற்கு சற்று முயற்சி தேவைப்படும். இதை 4 அல்லது 5 வாரகால பயிற்சியில் பந்துவீச்சாளர்கள் கண்டடைவர்” என்றுள்ளார்.