வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:
கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை,
  • உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி
  • இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
  • வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.