டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  தற்போது இந்த ஊரடங்கு, இன்றுடன்  முடிகிறது.

இதையடுத்து, தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கை செப்டம்பர் மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7 முதல் தொடங்கும், செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இந் நிலையில் விமான போக்குவரத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. அதே நேரத்தில் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.  வந்தே பாரத் திட்டத்தில் விமான சேவை தொடரும்  என்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.