டெல்லியில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ.சிஸ்டத்துக்கு தடை! என்ஜிடி உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்

டெல்லி:

லைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையில், தண்ணீரை வடிகட்டும் ஆர்.ஓ. ஃபில்டர்களுக்கம் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி – National Green Tribunal)  விதித்த தடைக்கு, தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துவிட்டது.

நிலத்தடி நீரை ஆர்.ஒ. என்பபடும் (Reverse osmosis (RO) தலைகீழ் சவ்வூடுபரவல் திட்டத்தின் படி வடிகட்டு, சுத்தமான நீராக உயயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வடிகட்டும்போது, நிலத்தடி நீரில் உள்ள உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுவதாகவும், பெரும்பாலான ஆர்.ஓ.க்கள் சரியான முறையில் தண்ணீரை பிரித்தெடுப்பதில்லை என்றும், தண்ணீர் பிரித்தெடுக்கும் போது,  ஏராளமான கழிவுநீர் வெளியேறுவதாகவும், இது சுற்றச்சூழல் பாதுகாப்புக்கு கேடு விளைக்கும் என்று பொதுநல வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆர்.ஓ. மூலம் தண்ணீர் சுத்திகரிக்க தடை விதித்ததுடன், ஆர்.ஓ. தொடர்பான விதிகளை உருவாக்கும்படியும், ஆர்.ஓ. மூலம், உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிமுறைகளை வகுக்கும்படி அறிவுறுத்தியது,

மேலும் டி.டி.எஸ் தண்ணீரில் லிட்டருக்கு 500 மி.கி.க்கு குறைவாக உள்ள இடங்களில் ஆர்.ஓ. 60% க்கும் அதிகமான நீர் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று  RO உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டதுடன்,  ஆர்ஓ-வின் தற்போதைய அமைப்பு 80% நீரைவீணாக வழிவகுக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு கடந்த 4ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களது உத்தரவுகளை சுற்றுச் சூழல் அமைச்சகம்,  மாசுக் கட்டுப்பாடு வாரியம்  (சிபிசிபி) சரியாக செயல்படுத்தவில்லை என்று கூறியதுடன் டிசம்பர் 31ந்தேதி வரை கெடுவும் விதித்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, RO உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீர் தர இந்தியா சங்கம், டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடியது. ஆனால், அது தடை விதிக்க மறுத்ததுடன்,  சுத்திகரிப்பாளர்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், நீராக்கப்பட்ட நீரின் மோசமான விளைவுகள் குறித்து பொதுமக்களை உணரவும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. என்ஜிபிடியின் உத்தரவை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஆர்.ஓ. அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன்,  ஆர்.ஒ. சங்கம்,  10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அணுகி சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ban on RO systems, Ban on RO systems in delhi, Central Pollution Control Board, delhi, Delhi High court, NGT, RO systems, RO systems banned, supreme court, Water Quality India Association
-=-