Random image

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை வாபஸ்

டில்லி:

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை இறைச்சி வர்த்தகர்கள் மற்றும் மாட்டு இறைச்சி சாப்பிடும் மக்கள் வரவேற்றுள்ளனர்.