சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி:

சிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது.

sasi

தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் எம்.பி. சசிகலாபுஷ்பா மனு செய்திருந்தார்.

அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் தன்னை தமிழக முதல்வர் அடித்தார் என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் கிளம்பின. பண மோசடி வழக்கு, அவர் வீட்டில் வேலைபார்த்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இரு இளம்பெண்கள் அவரது கணவர், மகன் மீது கொடுத்த பாலியல் புகார்கள்  போன்றவை அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

சசிகலா புஷ்பா சார்பாக அவரது வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது தனது கட்சிக்கார் சசிகலா புஷ்பா மற்றும் கணவர், மகன் ஆகியோர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கான மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும்  மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் இன்று நடைபெற்றது.

விசாரணையில் சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினரை இந்த மாதம் 22ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ban to arrest !, delhi, High Court, india, orders, Sasikala puspha, tamilnadu, இந்தியா, உத்தரவு, உயர்நீதிமன்றம், கைது செய்ய, சசிகலாபுஷ்பாவை, டெல்லி:, தடை, தமிழ்நாடு
-=-