வெயிலுக்கு ஏற்ற பனானா ஸ்மூத்தி…

  தேவையான பொருட்கள்;

பால் – 2 கப்

வாழைப்பழம் – 2

தேன் – 1 டேபிள்ஸ்பூன்

புளிக்காத தயிர் – 2 டேபிள்ஸ்பூன்

பட்டைப் பொடி – 1 சிட்டிகை

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

பாலில் தயிர், வாழைப்பழம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். பிறகு தேன் சேர்த்து மீண்டும் அடிக்கவும். ஒரு பெரிய டம்ளர் எடுத்து இதை ஊற்றி, மேலே பட்டைப்  பொடி தூவி, ஐஸ் கட்டிகள் போட்டால்  பரிமாறத் தயாராகிவிடும் சுவையான ஸ்மூத்தி.!

ஸ்மூத்தி செய்ய முதலில் தேவையானவை நல்ல தரமான பழங்கள். மற்றும் காய்கறிகள்  பிறகு பால் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இது  உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்கலாம்.

இதே முறையை பயன்படுத்தி தர்பூசணி, சப்போட்டா, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களிலும் தயாரிக்கலாம்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Banana smoothie suitable for summer, வெயிலுக்கு ஏற்ற பனானா ஸ்மூத்தி…
-=-