வாரணாசி

னவரி முதல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் புதியதாகா ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பை அளிக்க உள்ளது.

ஆவிகள் குறித்த நம்பிக்கை இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ளது.  இவற்றை ஆயுர்வேதத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.   ஆவிகளால் மனிதர்களுக்குப் பலவித உடல் மற்றும் மன நோய்கள் ஏற்படுவதாக இந்த ஆவிகள் விஞ்ஞானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.

அந்த விளக்கத்தில் ”ஆவிகள் விஞ்ஞானம் என்பது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி ஆகும்.  தேவர்கள்,  தேவதைகள், கந்தர்வர்கள், யட்சர்கள், ராட்சசர்கள், பூதங்கள்,  பிசாசுகள், நாகங்கள் மூலம் பல நோய்கள் உண்டாகும்.  அவற்றை சாந்திபாதம், பலிபிரதானம், ஹவனம் உள்ளிட்டவை மூலம் குணப்படுத்தலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளது.    இதற்காகப் பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.   ஆயுர்வேத துறையின் கீழ் இயங்கி வரும் இந்த கல்வி அந்தத் துரையில் உள்ள எட்டு பிரிவுகளில் ஒன்றாகும்.

ஆயுர்வேதத் துறையின் தலைவர் யாமினி பூஷன் திரிபாதி,”ஆவி விஞ்ஞானம் என்பது எங்கள் துறையின் எட்டு பிரிவுகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும்.  இந்த கல்வியானது ஆவிகள் தொடர்பான உடல் நலக் கோளாறு மற்றும் மனப் பிறழ்வுகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த கல்வியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.