கர்நாடகாவில் மே 28ம் தேதி பந்த்…எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு:

கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து எடியூரப்பா உத்தரவிட்டார்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற காரணத்தால் பதவி விலகினார்.

இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற குமாரசாமி இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

பின்னர் எடியூரப்பா கூறுகையில், ‘‘விவசாயிகள் கடனை முதல்வர் குமாரசாமி தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் 28ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.