சென்னை:

‘தூத்துக்குடி மற்றும் கும்பகோணத்திற்குப் பிறகு, கோயம்புத்தூருக்கு  கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவஇயந்திரம் வாங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

பண்டிகூட்’ எனப்படும் இந்த ரோபோ தற்போது தமிழகத்தில் 3 மாவட்டங்களில் செயல்படுத்தப் பட்டு வரும் நிலையில், விரைவில் அனைத்து மாவட்டங்களிக்கு வாங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும்போது, எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணங்கள் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ரோபோ இயந்திரம் மூலம் சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் கேரளாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ரோபோ மூலம் மனித கழிவுகள் அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டு வருகிறது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டிங் டேங்கை சுத்தம் செய்வதால், ஏராளமான பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் செப்டிங் டேங்க் கிளின் செய்யும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

இதுபோன்ற மரணங்களை  தடுக்கும் வகையில், சாக்கடைகளை சுத்தப்படுத்த  “பண்டிகோட்” என பெயரிடப்பட்ட இந்த ரோபா பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்த ரோபோ  ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும்.

தற்போது இந்த ரோபோ கேரள மாநில அரசின் நிதி உதவியோடு “ஜென் ரோபோட்டிக்ஸ்” என்ற நிறுவனம்  வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

வைஃப் பை, புளூடூத் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில், சாக்கடைகளை சுத்தப்படுத்த ஏதுவாக கை போன்ற வடிவமைப்பும், அதனை கட்டுப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோவை  கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள், அந்தந்த மாநில மொழிகளில் மாற்றிக் கொள்ளும் வகையிலும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் கட்டுப்படுத்த முடியும். தற்போது இந்த ரோபோ மூலம் கழிவுகளை அகற்றும் பணி தூத்துக்குடி, கும்ப கோணத்தை தொடர்ந்து கோவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள “பண்டிகோட்”  இயந்திரதை ஜென்ரோபோடிக்ஸ் 2 நிறுவனம்  மேம்படுத்தி உள்ளது.

.0, தற்போதுள்ள மூன்று கேமராக்களுடன் கூடுதலாக மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது, இதன் விலைரூ. 32 லட்சம். இந்த புதிய இயந்திரத்தில்,  பிக்-அப் மற்றும் கிராப் மேலும் நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரோபோ மூலம்   மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழி லாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் தனது டிவிட்டர் பதிவில் மனித கழிவுகளை அள்ளும் இயந்திரங்கள் வாங்க தமிழக அரசுக்கு பணம் இல்லையா?, மனம் இல்லையா?  என கேள்வி எழுப்பியிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  , மனித கழிவுகளை அகற்ற  இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும், வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்று பதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.