பெங்களூரு.

ந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மேட்ச் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

முதல்டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக ஆடி 189 ரன்னுக்க தோல்வியுற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இறுதியில்  இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா 40 ரன் எடுத்திருந்தது. வார்னர் 23, ரென்ஷா 15 ரன்னுடன்  2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது.

பரபரப்பான 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

புஜாரா 79 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சில் 97.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. புஜாரா 92 ரன்களும், ரஹானே 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  புஜாராவின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணி வெற்றிக்கு உதவியது.

188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினின் சுழல் காரணமாக 6 விக்கெட்டுகள் சாய்ந்தது. இந்த ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.

இதுவரை அஸ்வின் ஆடியுள்ள டெஸ்ட் மேட்ச்களில் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை  25 தடவையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமனில் உள்ளது.