பெங்களூர் மாநகராட்சி காங்கிரஸ் மேயர் கங்காம்பிகேவின் பெருந்தன்மை…

பெங்களூரு:

பெங்களூர் மாநகராட்சி மேயராக பதவி எற்றுள்ள  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகே அரசு ஒதுக்கியுள்ள வீட்டை  ஏற்க மறுத்து, அதை வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேயர் சவுடாம்பிகாவின் பெருந்தன்மை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த  சம்பத்ராஜ் பதவி கடந்த மாதம்  27-ந் தேதி நிறைவடைந்தது. மேயர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகே பதவி ஏற்றார்.

பெங்களூரில் உள்ள ஜெயநகர் வார்டு உறுப்பினராக  கங்காம்பிகே மேயராக பதவி ஏற்றதும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்ககி உள்ளார்.

இவர் மேயராக பதவி ஏற்றதும்,அரசு சார்பில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த கங்காம்பிகா,  அதற்குரிய பணத்தை வளர்ச்சிப்பணிகளுக்கு உபயோகிக்குமாறு அதிகாரிகளுக்கு கூறினார்.

மேயரின் பெருந்தன்மை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.