பெங்களூரு:

ஐ.எம்.ஏ நகை கடை மோசடி தொடர்பாக பெங்களூரு மாவட்ட ஆட்சியர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே பெங்களூரு உதவி கமிஷனர் ஒருவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளது  மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு சிவாஜி நகரில் இயங்கி வந்த ஐஎம்ஏ நகைக் கடை (ஐ மானிட்டரி அட்வைஸரி -ஐஎம்ஏ) அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ள. து இந்த நிறுவனத்தின் சார்பில், தனது குழுமத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகைக் கேற்ப ஒவ்வொரு மாதமும் 2% முதல் 3% வரை வட்டி கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி தரப்பட்டது.

இதை நம்பி  சுமார்  46ஆயிரம் பேர் ஐஎம்ஏ நிறுவனத்தில் முதலீடு செய்து இருப்பதாகவும், அவர் களின் பணம் சுமார் ரூ.1600கோடியுடன், அதன்  உரிமையாளர் முகமது மன்சூர் கான் தலைமறை வானார். இதனால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் முகமது மன்சூரை கைதுசெய்ய வேண்டுமென்று பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய தொடர்ந்து, மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.  இந்த குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஏற்கனவே பெங்களூரு நகர போலீஸ் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்ட நிலையில்,  தற்போது பெங்களூரு மாவட்ட ஆட்சியர் விஜயசங்கரையும்  கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு ஐஎம்ஏதலைவர் அனுப்பியதாக கூறப்படும்  ஒரு ஆடியோ பதிவில், கர்நாடகாவின் பல முக்கிய அரசியல்வாதிகள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், சிவாஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெய்க்,  தன்னிடம் ரூ.400 கோடியைப் பெற்றுவிட்டு அதை திருப்பித் தர மறுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக தன் வாழ்வை முடித்துக்கொள்ளப் போவதாகவும் முகமது மன்சூர் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.