உலக அளவில் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த நகரம்: பெங்களூருக்கு இரண்டாம் இடம்

இளம் கண்டுப்பிடிப்பாளர்கள் நிறைந்த உலகின் இரண்டாவது சிறந்த நகரமாக பெங்களூரு உள்ளது. ஐக்கிய நாடுகள் சார்பில் தொழில்நுட்ப ஆராய்ச்சி தளம், இளையதளத்தின் வேகம், வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதி, முதலீட்டார்களின் மதிப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு உலக நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா முதலிடத்தையும், அதிகளவில் ஈர்க்கக்கூடிய நகரமான பெங்களூரு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
bengalore
உலக நாடுகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெங்களூரு நகரம் 11 மெகா பைட்ஸ் இண்டர்னெட் வேகமும், 7504 பதிவு செய்த நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு 3.4மில்லியனாகவும் , 6236 முதலீட்டாளர்களையும் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்துள்ள பெங்களூரு நகரம் 22 சதவிகிதம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு ஆரம்ப கட்ட நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்ய கர்நாடகா அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2020ம் ஆண்டிற்குள் 20,000 தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க 47.3 மில்லியன் நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ELEVATE100 திட்டத்தின் மூலம் வர்த்தக ரீதியிலான நிறுவனங்களை மேம்படுத்த கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, பெங்களூருவை தவிர்த்து உலகின் சிறந்த நகரமாக தென்னாப்ரிகா, ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்,சாண்டியாகோ திகழ்வதாக அறிக்கை கூறுகிறது