மனைவியோடு நெருக்கமாக இருப்பதை முகநூலில் வெளியிட்ட கணவன் மீது வழக்கு..

 

பெங்களூரு :

பெங்களூருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா என்பவருக்கு இரு மனைவிகள்.

முதல் மனைவியை கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர், கடந்த ஆண்டு ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் ஆன சில தினங்களிலேயே ராஷ்மியின் நடத்தையில் ஹரி கிருஷ்ணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை அவர் துன்புறுத்தி வந்துள்ளார்.

உச்ச கட்டமாக மனைவியை பழி வாங்கும் வகையில், அவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் போது, அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகளை ஹரிகிருஷ்ணா, முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இந்த வீடியோ குறித்து ராஷ்மிக்கு தெரிய வந்ததால், கணவன் மீது போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார், ஹரிகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

– பா.பாரதி