பெங்களூரு:
கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்று மூன்று குரங்களை வைத்து, காந்தி சொன்ன பொன்மொழி நம் எல்லோருக்கும் தெரியும்.
கூடுதலாக லேப் டாப் வைத்திருக்கும் குரங்கு படத்தையும் சேர்த்து, கலவரங்களை அடக்க முயற்சி எடுத்திருக்கிறது கர்நாடக காவல்துறை.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை திறந்துவிட வேண்டும் என்று சமீபத்தில் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீர் திறந்துவிடப்பட்டது.
இதை வைத்து, கர்நாடக கட்சிகள் மற்றும் அமைப்பினர், தமிழர்க்கு எதிரான கலவரங்களை உருவாக்கினர். இதையடுத்து, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்கள் கடைகள் தாக்கப்பட்டன. பெரும் கலவரம் மூண்டது.
குறிப்பாக கர்நாடக தலைநகரான பெங்களூருவை மையமாக வைத்து கலவரம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரு காவல்துறை  வித்தியாசமான படங்களுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்று குரங்குகளை வைத்து பழமொழி உண்டல்லவா.. அதோடு லேப்டாப் வைத்திருக்கும்  குரங்கு படத்தையும் சேர்த்து, தீயதை எழுதாதே என்று அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
மனம் ஒரு குரங்கு என்கிற கான்செப்டை நினைத்து வெளியிட்டார்களோ, என்னவோ…  கலவரம் அடங்கினால் மகிழ்ச்சி!