பெங்களூர்:
னது அலுவலகத்தில் பணியாற்றும் 3 பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டிய பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன தலைவர் மீது போலீசில் பரபரப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று பெண்கள் இணைந்து பெங்களுர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
woman-violence-domestic-murder
பெங்களூரின் பிரபலமானது  எம்.ஜி.ரோடு. இங்குள்ள  ரகேஜா கட்டிடத்தில் மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பாக தனியார் நிறுவனம் ‘My Family Health Options’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனராக பானு பிரகாஷ் என்பவர் உள்ளார். பெங்களூரின் மைக்கோ லேஅவுட் பகுதியில் இவரது வீடு உள்ளது.
பானுபிரகாஷ் அலுவலக சுற்றுப் பயணம் எனக் கூறி, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது வழக்கம்.
அப்போது, அவர்கள்  ஹோட்டல் அறையில் தங்கியதாகவும், அப்போது தங்களுக்கு தெரியாமல் கூல் டிரிங்சில் மயக்க மருந்தை கலந்து  கொடுத்து,  தங்களை பானு பிரகாஷ் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, தாங்கள், அலுவலக முதலாளியிடம் கேட்டபோது, தங்களை பலாத்காரம் செய்த காட்சியை வீடியோவாக எடுத்து வைத்துள்ளது தெரிய வந்தது. அதைக்காட்டி தங்களை அவர் மிரட்டி வருவதாகவும், அடிக்கடி அவரது ஆசைக்கு அடிபணிய மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
women rape
டெலி-காலர் போன்ற பணியிடங்களுக்கு பெண்களை பணிக்கு எடுத்துவிட்டு அவர்களுக்கு பயிற்சி அவசியம் என்று ஒரு விதிமுறையை புகுத்தி, பயிற்சிக்கு வர வைத்து அவர்களையும் பானுபிரகாஷ் பலாத்காரம் செய்துள்ளார் என்று புகாரில் இப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இதையறிந்த பானுபிரகாஷ் தலைமறைவாகி விட்டதாகவும், மேலும் அலுவலக முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்கள் விடுமுறையில் சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.