சென்னை: ‍பெங்களூரு அணி நிர்ணயித்த 205 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி, 166 ரன்களையே எடுத்து, 38 ரன்களில் தோற்றது. இதன்மூலம் பெங்களூரு ஹாட்ரிக் பெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில், ஆண்ட்ரே ரஸ்ஸல் அடித்த 31 ரன்களே அதிகபட்ச ரன்கள். அவர் 20 பந்துகளில் அந்த ரன்களை அடித்தார். அவற்றில் 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகள் அடங்கும். ஷாகிப் அல் ஹசன் 25 பந்துகளில் 26 ரன்களை அடித்தார்.

கேப்டன் மோர்கன் 23 பந்துகளில் 29 ரன்களையும், ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 25 ரன்களையும், ஷப்மன் கில் 9 பந்துகளில் 21 ரன்களையும், நிதிஷ் ரானா 11 பந்துகளில் 18 ரன்களையும் அடிக்க, அணிக்கு தேவையான ஆட்டத்தை யாருமே ஆடாத காரணத்தால், அந்த அணியால், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியானது, இத்தொடரில், பெங்களூரு அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்து போனது. நீண்ட காலத்திற்கு பிறகு, கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி, ஐபிஎல் தொடரில் நல்ல துவக்கம் கண்டுள்ளது.