ராஜஸ்தானை 7 விக்கெட்டுகளில் வென்ற பெங்களூரு அணி!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு அணி.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை அடிததது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 57 ரன்களை அடித்தார்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில், துவக்க வீரர் தேவ்தத் படிக்கல், 37 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆரோன் பின்ச் 14 ரன்களுக்கே அவுட்டாக, கேப்டன் விராத் கோலியும், டி வில்லியர்ஸும் ஆட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.

விராத் கோலி 32 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், டி வில்லியர்ஸ் 22 பந்துகளில் 55 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 6 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடக்கம். வெற்றிக்கான கடைசி சிக்ஸரை அவர்தான் அடித்தார் ஆர்ச்சரின் பந்தில்.

குர்கீரத் சிங் 17 பந்துகளில் 19 ரன்களை அடித்து துணை நின்றார்.

ராஜஸ்தான் தரப்பில், மொத்தமே 5 பந்துவீச்சாளர்கள்தான் பயன்படுத்தப்பட்டனர். அதில் ஜெய்தேவ் 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் அதிகபட்சமாக 46 ரன்களை வழங்கினார்.