வெறியோடு வெளுக்கும் தேவ்தத் படிக்கல் – அமைதியாக பின்தொடரும் விராத் கோலி!

மும்பை: ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 ரன்கள் இலக்கை, மிக சாதாரணமாக எட்டும் வகையில் விளையாடி வருகிறது பெங்களூரு அணி.

கேப்டன் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் துவக்க வீரர்களாக ஆடிவருகிறார்கள். விராத் கோலி, 29 பந்துகளில், 37 ரன்களை அடித்திருக்க, அவருடன் இணைந்திருக்கும் தேவ்தத்தோ வேறு லெவலில் ஆடி வருகிறார்.

இதுவரை, மொத்தம் 39 பந்துகளை சந்தித்திருக்கும் அவர், 6 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களை விளாசியுள்ளார். இதனால், பெங்களூரு அணி, 11.4 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 124 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு, 50 பந்துகளில் 54 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

ராஜஸ்தான் அணியின் சகாரியா, கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட அனைத்து பெளலர்களுமே அடிவாங்கி வருகின்றனர்.