மெதுவான போக்குவரத்தில் மூன்றாம் இடம் பிடித்த பெங்களூரு

டில்லி

லா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் மெதுவான போக்குவரத்து கொண்ட மூன்றாவது நகரமாக பெங்களூரு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல நகரங்க்ளில் தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு போக முடியாமல் பலரும் துயருற்று வருகின்றனர். இது குறித்து வாடகைக் கார் நிருவனமான ஓலா ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி அதன் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையில் காணப்படுவதாவது.

பெரு நகரங்களில் மிகவும் மெதுவான போக்குவர்த்தில் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. பாட்னா முதல் இடத்திலும் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன. பெங்களூருவில் சராசரி வேகமாக மணிக்கு 15.5 கிமீ உள்ளது. அதனால் மக்களுக்கு எங்குமே சரியான நேரத்தில் செல்ல முடிவதில்லை. நெரிசல் நேரங்களில் இதைப் போல 162% அதிக நேரம் ஆகிறது. அத்துடன் 90% மேற்பட்டோர் பேருந்து உள்ளிட்ட பொதுவான போக்குவரத்து சாதனங்களை உபயோகிப்பது இல்லை.

கணக்கெடுப்பு நடத்தப்பட்ட இடங்களில் சென்னை நகரில் மட்டுமே போக்குவரத்து வசதிகள் தேவயான அளவுக்கு இருந்துள்ளன. பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சாதனங்களை 70%க்கும் மேற்பட்ட மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். சென்னயில் ஓடும் ஒவ்வொரு பேருந்தும் சுமார் 1300 பயணிகளை தினமும் ஏற்றிச் செல்லுகிறது. சராசரியாக நகருக்குள் சுமார் ஒரு மணி நேரத்தில் பல இடங்க்ளுக்கு சென்று விட முடிகிறது.

கேரள மாநிலம் கொச்சி நகரில் அதிக அளவில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மைசூரு நகரில் பொது சைக்கிள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பலரும் சைக்கிளில் செல்ல தொடங்கி உள்னர். அதே நேரத்தில் பேருந்துகள் மூலம் மைசூரு நகரின் முக்கிய இடங்களுக்கு செல்வது எளிதாக உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.