சொத்து கொடுக்காத தந்தையின் கண்களை நோண்டி எடுத்த மகன் கைது

பெங்களூரு

னக்கு சொத்து கொடுக்க மறுத்த தந்தையின் கண்களை தோண்டி எடுத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜே  பி நகரில் வசிப்பவர் பரமேஸ்வரன்.   சுமார் 65 வயதான இவர் அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.  இவர் பணியில் இருந்த  போது தனது வருமானத்தில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி உள்ளார்.   தற்போது அவற்றை இவரே அனுபவித்து வருகிறார்..

பரமேஸ்வரன் மனைவி சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  அதன் பிறகு பரமேஸ்வரனின் மகன் சேத்தன் பல முறை தனக்கு சொத்துக்களை கொடுக்கும் படி கேட்டுள்ளார்.   ஆனால் பரமேஸ்வரன் தொடர்ந்து மறுத்து வந்தார்.   இந்நிலையில் நேற்று பரமேஸ்வரன் வீட்டுக்கு வந்த சேத்தன் தந்தையிடம் தனக்கு சொத்துக்களை திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.   அவர் மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில் சேத்தன் தனது தந்தையின் இரு கண்களையும் நோண்டி எடுத்துள்ளார்.    வலி தாங்காமல் பரமேஸ்வரன் கத்தியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   ஜே பி நகர் காவல்நிலைய காவலர்கள் சேத்தனை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.