பெங்களூரு – சான்பிரான்சிஸ்கோ இடையே ‘பாயின்ட் டூ பாயின்ட்’ விமான சேவை துவக்கம்!

பெங்களூரு: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ – இந்தியாவின் பெங்களூரு இடையே, எங்குமே நிற்காத ஏர்-இந்தியா விமான சேவை, ஜனவரி 9ம் தேதி துவக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான சேவைகளிலேயே, இடைநில்லாத நீண்டதூர விமான சேவை இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் சிலிக்கன் வேலிக்கும், இந்தியாவின் சிலிக்கன் வேலிக்கும் இடையே நடைபெறும் நேரடி இடைநில்லா விமான சேவையாக இது வர்ணிக்கப்படுகிறது.

ஏர் இந்தியா AI 176 விமான சேவையானது, சனிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும்.

இந்த சேவையில் போயிங் 777-200LR விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதில், மொத்தம் 238 பயணிகள் அமரலாம். 8 முதல் வகுப்பு இருக்கைகளும், 35 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும், 195 எகானமி கிளாஸ் இருக்கைகளும் இவ்விமானத்தில் இருக்கும். இதுதவிர, 4 காக்பிட் மற்றும் கேபின் குழுவினருக்கான 12 இருக்கைகளும் உண்டு.