ஐதராபாத்திற்கு எளிய இலக்கை நிர்ணயித்த பெங்களூரு – 132 ரன்கள் எடுத்தால் வெற்றி!

அபுதாபி: பெங்களூரு – ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் நாக் அவுட் பிளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு, 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பெங்களூருவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.

துவக்க வீரராக வரிசை மாறி இறங்கிய கேப்டன் விராத் கோலி, 7 பந்துகளில் 6 ரன்களை எடுத்து அவுட்டானார். படிக்கல் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே அடித்து அவுட்டானார்.

ஆரோன் பின்ச் 30 பந்துகளில் 32 ரன்களை அடிக்க, டி வில்லியர்ஸ் 43 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். முக்கிய வீரர்கள் இப்படி சொதப்பிய நிலையில், வேறு எந்த பேட்ஸ்மெனும் அணிக்கு தேவையான ஆட்டத்தை ஆடவில்லை.

இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.

ஐதராபாத் அணியின் ஜேஸன் ஹோல்டர், 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் க‍ைப்பற்றினார். நடராஜனுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

இப்போட்டியில், எந்த அணி தோற்கிறதோ, அந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may have missed