அபுதாபி: மும்பை அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை அணி, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஜோஷ் பிலிப்பி 24 பந்துகளில் 33 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 45 பந்துகளில் 74 ரன்களையும் அடித்தனர்.
தேவ்தத்தின் கணக்கில் 1 சிக்ஸர்கள் & 12 பவுண்டரிகள் அடக்கம். வேறு எந்த பேட்ஸ்மெனும் 15 ரன்களைத் தாண்டவில்லை. கேப்டன் கோலி 14 பந்துகளில் 9 ரன்களையே அடித்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது பெங்களூரு அணி.
மும்பை அணியின் பெளலர் பும்ரா, 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். ராகுல் சஹார், 4 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 43 ரன்களை வழங்கி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.