அபுதாபி: டெல்லி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில், துவக்க வீரர் ஜோஷ் பிலிப்பி 17 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தேவ்தத் படிக்கல் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். கேப்டன் கோலி 24 பந்துகளில் 29 ரன்களையும், டி வில்லியர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்களையும் அடித்தனர்.

கிறிஸ் மோரிஸ் டக் அவுட்டாக, ஷிவம் துபே 11 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அந்த அணியால்.

டெல்லி அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய டேனியல் சாம்ஸ் 40 ரன்களை வாரி வழங்கி, விக்கெட் எடுக்கவில்லை. அதேசமயம், அஸ்வின் 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 18 ரன்களை மட்டுமே கொடுத்தார். நார்ட்ஜே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.