201 ரன்கள் அடித்தும் சூப்பர் ஓவரில் வென்ற பெங்களூரு அணி!

துபாய்: கடைசி கட்டத்தில் பெரிய ஆக்ரோஷம் காட்டி, 202 ரன்கள் என்ற இலக்க‍ை நெருங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 201 ரன்களே எடுக்க, சூப்பர் ஓவரில் வெற்றியை தனதாக்கியது பெங்களூரு அணி.

பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்க‍ை விரட்டிய மும்பை அணி, 15 ஓவர்கள் முடிவு வரையிலும், வெற்றிபெறும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், அதன்பிறகு ஆதிக்கம் காட்டிய பொல்லார்டு மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஆட்டத்தை சமனில் முடித்தனர்.

இஷான் கிஷான் 58 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து 99 ரன்கள் விளாசி அவுட்டானார். பொல்லார்டு 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்து 60 ரன்களை குவித்தார்.

இதனால் ஆட்டம் சமனாக, வெற்றியை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், முதலில் ஆடிய மும்பை அணி 1 ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்து, 1 விக்கெட் இழந்தது.

பின்னர் ஆயெ பெங்களூரு அணி, விக்கெட் எதுவும் இழக்காமல் 11 ரன்கள் எடுத்து வென்றது. இவ்வளவு பெரிய ரன்கள் அடித்தும் சூப்பர் ஓவரில் வெல்கிறோமே என்ற சிறிய வருத்தம் பெங்களூரு அணிக்கும், இந்தளவு பெரிய ரன்னை அடித்தும், கடைசியில் வெற்றி 1 ரன்னில் ஏமாற்றி விட்டதே என்ற பெரிய வருத்தம் மும்பை அணிக்கும்…