Random image

பெங்களூரு-தூத்துக்குடி நேரடி விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி:

பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது. இந்த விமானத்துக்கு தூத்துக்குடிக்கு விமானநிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாரந்தோறும் செவ்வாய்கிழமையை தவிர்த்து பிற நாட்களில் இந்த விமானம் இயக்கப்படும். பிற்பகல் 2 மணிக்கு பெங்களுருவில் புறப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானம் 3.15க்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

வரும் 28ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.