உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி பாங்காக்

--

மாஸ்டர்கார்ட் நிறுவனம் எடுத்த ஒரு சர்வேயில் உலகின் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ban

பாங்காக் நகரம் 2016-ஆம் ஆண்டில் மட்டும் 21.47 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் அது 33 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பாங்காக் அரண்மனை, வாட் போ புத்த மடாலயம் மற்றும் மிதக்கும் மார்க்கெட் ஆகியவை பாங்காக்கின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இது மட்டும்தான் பாங்காக்கை முதலிடம் பெறும் அளவுக்கு உயர்த்தியுள்ளதா என்று கேட்காதீர்கள். பாங்காக்கின் பட்டயா பகுதியில் கொடிகட்டிப பறக்கும் செக்ஸ் வியாபாரம், மசாஜ் கிளப்புகள், கேளிக்கை கூடங்கள் ஆகியவைதான் பாங்காக் இத்தனை மில்லியன் சுற்றுலா பயனிகளை ஈர்க்கும் காரணமாம். பாங்காங்குக்கு அடுத்த இடத்தில் லண்டன் மாநகரம் உள்ளது. இந்து இந்த ஆண்டில் 19.88 மில்லியன் பயணிகளை ஈர்த்துள்ளது.

இந்த ஆய்வில் சிறந்த சுற்றுலா தலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 132 நகரங்களில் 43 ஆசிய பசிபிக் பகுதியில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் 36 நகரங்களும், லத்தீன் அமெரிக்காவில் 19 நகரங்களும் அமெரிக்காவில் 14 நகரங்களும் மத்திய கிழக்கில் 21 நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்திய நகரங்களான மும்பை, சென்னை, டில்லி, கொல்கொத்தா மற்றும் புனே ஆகிய நகரங்களும் அடக்கம்.