மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம்: பங்களாதேஷ் நடிகர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

கொல்கத்தா:

நாடு முழுவதும் தீவிர  தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கு ஆதரவாக  தேர்தல் பிரசாரம் செய்த பங்களாதேஷ் நாட்டு நடிகர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

ராணி ரஷ்மோனி என்ற புகழ்பெற்ற தொடரில் நடித்தவர் பங்களாதேஷை சேர்ந்த பிரபல நடிகரான காஸி அப்துன் நூர். இவர் மம்தாவை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் காஸி அப்துன் நூர் இந்திய நாட்டை  விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக புகார் கூறியதையடுத்து அவருடைய விசாவை ரத்து செய்த மத்திய உள்துறை அமைச்சகம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் பங்களாதேஷை சேர்ந்த மற்றொரு நடிகரான,  பெர்டோஸ் அகமது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதனால் அவருடன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பெர்டோஸ் அகமது, பிரசாரம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். யார் என்று கூட எனக்குத் தெரியாது. நடிகை பாயல் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் பிரசாரத்துக்குச் சென்றேன். ஆனால்  அது தவறு என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்றார்.