வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று வங்கதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரூ.28 ஆயிரம் கோடி ஊழல் செய்த வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.

ziz

73 வயதான கலிதா ஜியா, ஏற்கெனவே ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை தண்டனை பெற்று வருகிறார். இந்த நிலையில் கலிதாவுக்கு நேற்று வேறு ஒரு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதன்படி தண்டனை விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறை தண்டனைகளையும் கலிதா ஒருசேர சிறையில் கழிப்பார் என்றும், இதன் மூலம் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறையில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கதேச சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முஷரப் ஹுசைன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ”அரசு நிதியையும், பதவியையும் தவறாகப் பயன்படுத்திய காரணத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கலிதாவுக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது” என்றார்.