ரசிகரை தாக்கிய பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை

சிகரை தாக்கிய பிரபல வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு தண்டனையாக, சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் பிரபல சபீர் ரஹ்மான். இவர் சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக விளையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமான சபீர், நடுவரின் அனுமதியின்றி ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று அந்த ரசிகரை தாக்கினார்.   இதை கவனித்த நடுவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவத்தால் சபீர்  மீது அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்,   ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவருக்கு 20 லட்சம் வங்கதேச டாகா (இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம்) அபராதம் விதித்தது. மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட தடையும் விதித்தது.