கிரிக்கெட் : ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வங்க தேச அணி

புதாபி

சியக் கோப்பை 2018ல் பாகிஸ்தானை தோற்கடித்து வங்க தேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018ல்  நேற்றைய ஆட்டம் ஷேக் சையத் மைதானத்தில் நடைபெற்றது.    இந்த போட்டியில் வங்க தேச அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது.   டாசில் வென்ற வங்க தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.    நேற்றைய ஆட்டத்தில் பாக் அணியில் முகமது ஆயிருக்கு பதிலாக ஜுனத் கான் இடம் பெற்றிருந்தார்.

முதலில் மிகவும் தடுமாறிய வங்க தேச அணி 4.2 ஓவரில் 3 விக்கட் இழப்புக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.   அதன் பிறகு ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரகிம் மற்றும் முகமது மிதுன் அருமையாக விளையாட தொடங்கினர்.   இதில் மிதுன் 84 பந்துகளில் 60 ரன்களும் முஷ்பிகுர் 116 பந்துகளில் 99 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.   வங்க தேசம் 48.5 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காம நிர்ணையிக்கப் பட்டது.   முதல் நான்கு ஓவர்களில் பாகிஸ்தான் அணி 18 ரன்கள் எடுத்திருந்த போதிலும் 3 விக்கட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் சற்றே அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து வந்த பாகிஸ்தான் அணியினர் வெற்றி இலக்கை அடைய கடும் முயற்சி செய்தனர்.   எவ்வளவு முயன்றும் அந்த அணியால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.   அதை ஒட்டி வங்க தேச அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து வங்க தேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.    துபாயில் நாளை நடைபெற உள்ள இறுதிச் சுற்றில் வங்க தேச அணி இந்திய அணியுடன் மோத உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.