வரதட்சணை  புகாரில் மாட்டிய வங்க தேச கிரிக்கெட் வீரர்

டாக்கா

புகழ்பெற்ற வங்க தேச கிரிக்கெட் வீரர் மொசாதிக் ஹுசைன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார்.

வங்க தேச கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் மொசாதிக் ஹுசைன் சாய்கத்.   இவர் கடுத்த மாதம் நடைபெற உள்ள அமிரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை வங்க தேச அணியில் இடம் பெற்றுள்ளார்.  இந்த போட்டி வரும் மாதம் 13 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில் இவர் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது.

உஷா

 

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு மொசாதிக் தனது உறவினரான சார்மின் சமீரா உஷா என்பவரை திருமணம் செய்துள்ளார்.   இருவருக்கும் இடையில் மனவேற்றுமை உள்ளதாக கூறப்படுகிறது.   சமீபத்தில்  இவரது மனைவி உஷா இவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.   அதில் மொசாதிக் தன்னிடம் ரூ.8.4 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உஷாவின்புகாரை பதிவு செய்த தலைமை கூடுதல் நீதிபதி ரோஷினா கான் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.   வங்க தேச கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றசாட்டு பற்ரி மோசாதிக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

மொசாதிக்கின் சகோதரர் முசாபர் ஹுசைன், “அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே கருத்த் வேற்றுமை உள்ளது.   தகராறு முற்றவே மொசாதிக் கடந்த 15ஆம் தேதி உஷாவுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.   ஆனால் விவாகரத்துக்கு அதிகப் பணம் கேட்டுள்ள உஷா இவ்வாறு பொய் புகார் கூறி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.