லண்டன்: பங்களாதேஷ் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற வகைப்பாட்டில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்களில் ஒருவரும், முதல் 10 சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், வங்கதேச அணி வெற்றிபெற்றது. இதில், ஷாகிப்பின் சிறப்பான செயல்பாட்டை வைத்தே அவர் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இத்தொடரில் அவர் ஆட்டமிழக்காமல் 2 அரை சதங்கள் அடித்ததோடு, 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். அவர் மொத்தமாக 140 ரன்களை எடுத்துள்ளார்.