பங்களாதேஷில் அரசு பணிகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து….மாணவர்கள் போராட்டம்

டாக்கா:

அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று அறிவித்தார். மாற்று திறனாளிகள், பிற்படுத்தப்ப சிறுபான்மையினருக்கான பணிகளுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய சாலைகளை மறித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தனர். டாக்கா பல்லைக்கழகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசினர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி சுட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் மாணவர்களாக இருக்க முடியாது. தேர்வு, வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.