Random image

வங்கதேசத்து வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு தடையா?

 

தாகா: தேசிய கிரிக்கெட் லீக்கின் போது அணியின் சக வீரர் அராஃபத் சன்னியைத் தாக்கியதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு தடை விதித்தது.  அதில் இரு ஆண்டுகள்  இடைநீக்கத்திற்கான காலமாகும்.  மேலும் மூன்று லட்சம் டாகா அபராதமும் விதிக்கப்பட்டது.

குல்னாவில் உள்ள ஷேக் அபு நாசர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தாகா பிரிவுக்கும் குல்னா பிரிவுக்கும் இடையிலான போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் தனது அணியின் சக வீரரை அறைந்து உதைப்பதைக் கண்ட அதிகாரிகள் ஷஹாதத்தின் முறைசாரா ஆன்-பிட்ச் நடத்தை குறித்துத் தெரிவித்தனர்.

அறிக்கையின்படி, பந்தை எவ்வாறு தேய்ப்பது என்பது குறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு சண்டை தொடங்கியது.

33 வயதான அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை வங்கதேச கிரிக்கெட் அமைப்பு உறுதிப்படுத்தியது.

“அவருடைய கடந்தகால நடத்தையை கருத்தில் கொண்டு அவரை ஐந்து ஆண்டுகள் தண்டிக்க முடிவு செய்தோம். அவரது தடையின் கடைசி இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்படும்,”என்று பி.சி.பியின் தொழில்நுட்பக் குழுத் தலைவர் மின்ஹாஜுல் அபேடின் மேற்கோளிட்டுள்ளார்.