டாக்கா:

ங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயண அமிலங்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினல் கடுமையாக போராடி வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்கா பகுதியில் உள்ள சவுக் பஜாரில் உள்ள பல மாடி கட்டிம் ஒன்றில், கெமிக்கல் பொருட்கள் வைக்கும் குடோனும் செயல்பட்டு வந்தது. மிகவும் குறுகலான அந்த பகுதியில், நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பிடித்து ரசாயணங்களும் எரிந்ததால், ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. அடுத்தடுத்த கட்டிடங்களும் தீயினால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக தீ விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிக்கினர். இவர்களில் 69 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ள தீயணைப்பு துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த  2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 1,100பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.